Wednesday, 22 January 2025

வட்ட நிலவே வி.

வட்ட நிலவே வா வா.

வட்ட நிலவே வா !வா!
கிட்டக் கிட்ட வா ! வா!
எட்ட எட்டக் கிட்டக் கிட்ட 
தொட்டு விளையாட வாவா!

வெள்ள வெள்ளிச் சட்டையோ!
வேக மாகப் போவாயோ!
சொல்லைக் கேட்க மாட்டாயோ!
செல்லக் குட்டி வருவாயோ!

ஒளிஞ்சு விளை யாடுகிறாய்
ஓடி ஓடித் தேடுகிறாய்.
பாப்பா இங்கே இருக்குறேன்
பாராமல் ஏனோ ஓடுகிறாய்.

கண்டு பிடித்தது நானேதான்
கட்டி முத்தம் தந்திடுவாய்.
வந்து குதிரை ஏறுவேன்.
வரா விட்டால் தேடுவேன்.

கொ.பெ.பி.அய்யா.



.






No comments:

Post a Comment