Tuesday, 18 February 2014

சின்னப் பெண்ணே சேதி கேளு.

சின்னப்பொண்ணே !
-------------சேதி கேளு!(குழந்தைப் பாடல்)

சின்னப்பொண்ணே!சின்னப்பொண்ணே!
சேதி கேளம்மா----உந்தன்
அன்னைப் பேச்சைக் கேட்டு வளர்ந்து
அருமை கொள்ளம்மா.-----

அம்மா
பெருமை அடையணும்-----நீயம்மா.
வளமை அடையணும் வளரம்மா.
காலம் மிகவும் கெட்டுப்  
போச்சு
கருத்தில் கொள்ளம்மா

-----அழகுக்
கோலம் போன்றே 
உன்னைக் காக்க
தெரிந்து கொள்ளம்மா.-----நீயும்
புரிந்து நடக்கனும்------பக்கம்
அறிந்து பழகணும்.

பெண்ணினந் தின்னும் பேய்கள் அலையும்
பார்தது விலகணும் ---எவரும்
அறியா மனிதர் அருகே வந்தால்
சரியாப் பேசி நெருங்காமல்---விட்டு
விலகிப் போகணும்----பாப்பா
உசார் ஆகணும்

பள்ளி வீடு இரண்டுந்தவிர வேறே எங்குமே
உற்றாரன்றி உறவென்றும் 
நம்பி நீயுமே!
அறியா யாருடனும் செல்ல வேண்டாமே.----- எவரும்
தின்னும்ம் பண்டம் தந்திட்டாலும்
வாங்க வேண்டாமே-----உடனே
நீங்க வேண்டுமே.

கொ.பெ.பிச்சையா.






சுட்டிப் பாபா.

சுட்டிப் பாப்பா

சுட்டிச் சுட்டிப் பாப்பா  நீ
சுட்டு விழியில் தேடுறே!
கிட்டக் கிட்ட வாவென
கேவிக் கேவித் துள்ளுறே!.

குட்டிக் குட்டிப் பாப்பா  நீ
குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கிறே!
கொட்டிக் கொட்டிக் கைகளால்
கூப்பிடத் தானே துள்ளுறே!

எட்டி எட்டிப் பாக்குறே நீ
என்னை நீயும் அழைக்குறே!
கட்டி முத்தம் கொடுக்கத்தானே
கைய்ய நீட்டிக் கேக்குறே!

தட்டித் தட்டிப் பாப்பா நீ
தாவித் தாவித் தவழுறே!
தொட்டு நானும் தூக்கிட 
கட்டி அணைக்கத் தவிக்குறே!

ஆட்டி ஆட்டிப் பாப்பா நீ
ஆடி ஓட நினைக்குறே!
பாட்டி வாயைக் காட்டித்தானே
பதிலும் கூறத் துடிக்குறே!

நீட்டி நீட்டிப் பாப்பா நீ
நினைச்சு எதையோ கேக்குறே!.
காட்டி அதையே கேட்டு நீ
கையைக் காட்டி அழுகுறே!.

ஊட்டி ஊட்டிப் பாப்பா நீ
ஒன்னு கூடத் தின்னல்ல.
கேட்டகாரும் வாங்கித் தாரேன்
கிளியே வந்து உண்ணடி!

கெட்டித்தனமா நீயும் நன்று
கடமையாற்றி வளரணும்.
சுத்தமாகக் கைகளை நீ
பத்திரமாகக் காக்கணும்.

நல்லக் குழந்தை நீயென்றே
நாடு உன்ன வாழ்த்தணும்.
ஈன்றவர்கள்உன் புகழில்
மீண்டும் இன்பம் மகிழணும்.

பெற்ற உனது தந்தையை
பெருமை பேசி மெச்சணும்!
உற்ற அன்னை தவத்தினை 
ஊரும் போற்றி வியக்கணும்!

உனக்கும் மட்டும் வாழாமல்
உலகுக்காக வாழணும்.
நினைக்க மணக்கச் சரித்திரம்
நீயும் செய்து நிலைக்கணும்.

கொ.பெ.பிச்சையா.

படப் பெட்டி.

தொ.கா.பெட்டி.
.
தொலைக் காட்சிப் பெட்டியாம்,
தூரந் தொலைத்த பெட்டியாம்.
எங்கிருந்தோ  காட்சியதை
இங்கே  காட்டும்  பெட்டியாம்.

வண்ணக் காட்சி பெட்டியாம்,
கண்டு மகிழும் பெட்டியாம்,
வனங்காடு மலையெல்லாம்,,
வையந் தெரியும் பெட்டியாம்.

பாட்டுப் பாடும் பெட்டியாம்
பாட்ம் சொல்லும் பெட்டியாம்.
ஆட்டம் ஆடும் காட்சிகள்,
அருகே காணும் பெட்டியாம்.

கதை கூறும் பெட்டியாம்,
கருத்துச் சொல்லும் பெட்டியாம்.
விளையாட்டுப் போட்டிகள்
வீட்டில் பார்ககும் பெட்டியாம்.

பொம்மை காட்டும்  பெட்டியாம்,
புதுமை  பார்க்கும்  பெட்டியாம்,,
நாட்டு நடப்புச் செய்திகள்
நேரே தரும் பெட்டியாம்.

கொ.பெ.பிச்சையா.




அழகு மயில்.

அழகு மயில்.(குழந்தைப்பாடல்)

அதோ அங்கே அழகு மயில்,
அசைஞ்சு அசைஞ்சு  நடக்ககிறது,
நீளமான வாலை நீட்டி
நிமிர்ந்து  கர்வம் காட்டுகிறது

வண்ண வண்ணச் சிறகினை,
விரித்து விரித்துக் காட்டுகிறது
வானில் ஓடும் மேகங்கண்டு
வரிசை கட்டி  ஆடுகிறது..

ஆடும் அழகுங் கூடுகிறது
அழகுக் கொண்டை ஆடுகிறது
கால் நடனம் நாட்டியம்,ஆட
சலங்கைக் கட்டி விடலாமா?

இன்னும் கொஞ்சம் ஆடிடவே
எண்ணும்  சந்தோச மாகிறது.
உண்ணத் தனக்குப் பழங்களும்
ஊட்டி விடக் கேட்கிறது.

கருமேகங் கண்டு ஆடுகிறது.
வரும் மழை வாழ்த்தி ஆடுகிறது.
வெப்பம் போனதைக் கூறுகிறது.
வெளியே அகவி அழைக்கிறது.

அரை வட்டமாகச் சிறகினை
அகழ்த்திக் கணிதம் சொல்கிறது
கோண மானியைக் காட்டுகிறது
வான வளைவைத் தோற்றுகிறது.

அழகினை இரசித்து மகிழ்கிறது.
உலகின் வடிவை உணர்த்து கிறது.
பழகிடப் பாப்பாவைக் கூப்பிடுகிறது
அழகைக் காட்டி ஆடுகிறது.

கவஞர் கொ.பெ. பிச்சையா.

.



.




பூனைக் குட்டி.

பூனைக்குட்டி(குழந்தைப் பாடல்.)

மியா மியாப் பூனைக்குட்டி
மெல்லப் பார்க்கு பால எட்டி.
கடிக்காதடி அம்முக்குட்டி
கனிவு காட்டடி செல்லக்குட்டி.


உனக்கு வச்ச பாலத்தானே.
எனக்கும் தான்னு கேட்குதே.
உனக்கும் எனக்கும் உண்டுண்ணே
உறுதி சொல்லடி பொம்முக்குட்டி.

இப்போ சேர்ந்து குடிப்போமா?
எடுத்து வாராள் அம்மாதான்.
என்னைப் போல குட்டிதான்
எனக்கு நல்ல தோழிதான்..

பார்த்துப் பார்த்துக் குடிக்கிறையா?
பாப்பா நன்றி சொல்லுறையா?
சேர்த்துக்கோனு பார்க்குறையா?
தீர்ந்து போச்சு பாலுங்கறையா?

இன்னும் ஊற்றித் தருவேனே.
பின்னும் கேட்டுப் பெறுவாயே.!
திருடிப் பழகக் கூடாது.
பிரியம் கெடுக்கல் ஆகாது.

கொ.பெ.பி.அய்யா.
..

பறக்கும் பந்து.

பறக்கும் பந்து (குழந்தைப் பாடல்)

பந்து பந்து நல்ல பந்துதான்.
பறக்கும் நல்ல பந்துதான்.
காற்று நிறைஞ்ச பந்துதான்.
கனம் இல்லாத பந்துதான்.


அப்பா தந்த பந்துதான்.
அழகு வண்ணப் பந்துதான்
அடிச்சு நோகாப் பந்துதான்.
ஆடி மகிழும் பந்துதான்.

உருண்டு செல்லும் பந்துதான்.
உதைத்தால் ஓடும் பந்துதான்.
முட்டி எழும் S.
மோதித் திரும்பும் பந்துதான்.

கையால் ஆடும் பந்துதான்.
காலால் அடிக்கும் பந்துதான்.
தலையில் முட்டும் பந்துதான்.
தாவிப் பிடிக்கும் பந்துதான்.

விரட்டி ஓடி ஆடலாம்
உருட்டி ஆடி மகிழலாம்
ஓடி ஆடி உடம்பினை
கூடி பலம் ஏற்றலாம்.

கொ.பெ.பி.அய்யா

நிலாச்சோறு.

நிலாச்சோறு (குழந்தைப் பாடல்)

நிலா வருது பாரடியோ!
நிறுத்தி.அதனைக் கேளடியோ!.
உலா போவது எங்கடியோ!
உன்னைச் சேர்க்கச் சொல்லடியோ.!

உணவு உண்ணு சீக்கிரமே.
உனக்குப் பாட்டுச் சொல்லிடுமே.
தின்னச் சீனி மிட்டாயும்
தினமும் வாங்கித் தந்திடுமே!.

தேடித் தேடி உன்னையே
ஓடி ஓடி வருகுதே..
கூடி விளையாடத் தானுமே..
கூப்பிடுமே சாப்பிடேன்

உணவு உண்டால் வளரலாம்.
உலகம் சுற்றிப் பார்க்கலாம்.
பாட சாலை போகலாம்.
பார் ஆள ஆகலாம்.

அதோப் பாரு வருகுதே..
இதோப் பாரு சிரிக்குதே.
உன்னை நிலா பார்க்குதே!
அன்னம் உண்ணச் சொல்லுதே.

பாலுஞ் சோறு உண்டுமே
பாப்பபா உன்னைத் தேடுதே.
உண்ணு உண்ணு சீக்கிர்ம்
வெண்ணிலாவும் கேக்குதாம்.

கொ.பெ.பி.அய்யா.

Monday, 17 February 2014

மழலை

புதிய நல்வழி!   2

கல்வியைத் தேடு!
காலம் போற்று!
கிராமம் ஏற்று!
கீர்த்தி நாடு!
குதர்க்கம் தவிர்க்க!
கூடி வாழ்க!
கெடுவார் திருத்து!
கேள்வி தெளிக!
கைகளை நம்பு!
கொடுத்து வளர்க!
கோட்டம் நிமிர்த்து!
கௌதமன் பற்று!

கொ.பெ.பி.அய்யா.







குழந்தை பேசுகிறது.

குழந்தை பேசுகிறது!

சின்னச் சின்னக் குழந்தை நான்.
சிரிக்கும்  அன்புக் குழந்தை நான்.
மனசு எனும் சுமையில்லை.
எனது எனும் குணமில்லை.

மெல்ல மெல்லப் 
பேசுகிறேன்
அள்ளி அள்ளிக் கொஞ்சுவீர்
அதட்டி மட்டும் அடக்காதீர்.
பயங்காட்டி மிரட்டாதீர்.

பயம் பழகும் செயலினை,
பாப்பாவிடம் பழக்கா தீர்.
சுயம் பயிலுங் குழந்தையை
தயவு பண்ணித் தடுக்காதீரீ!

கண்ணீர் கசியச் செய்யாதீர்!
எண்ணம் பதிய திட்டாதீர்!
அஞ்சாமை ஊட்டு வீர்!
பிஞ்சிலே நாட்டு நீர்!

வெற்றுக் காகிதம் போல நான்.
சிறு  நெஞ்சம் வெள்ளை நான்.
பதிவுகளைச் சுமக்கும் நான்.
விதி எழுதப் படிக்கிறேன் நான்.

அன்புதானே குழந்தைக்கு
அருமருந்து ஆகிக்காக்கும்!
அரவணையும் குழந்தைக்கு
ஆரோக்யம் பாசம் ஆக்கும்.

திடுக்கிடும் பேச்சுக்களை
விடுக்காதீர் குழந்தை முன்
முடுக்கப்பட்டும் இதயமோ!
துடிக்கும் வேகம் சீர் கெடும்

சிரிக்க விட்டு மகிழுவீர்!
சிறு ஆட்டம் காட்டுவீர்!
உற்சாகம் ஏற்றி ஏற்றி
உடல் வலிமைக் கூட்டுவீர்!

கட்டங்கட்டி இருத்தாதீர்!
வட்டத்துக்குள் ஒடுக்காதீர்!
இட்டத்துக்கும் விளையாட
விட்டு விட்டும் விலகாதீர்!

இல்லம் ஒரு பள்ளி போலும்,
பள்ளி பயிற் களம் போலும்,
நல்லதொரு சூழ் நிலையும்:
உள்ளதாகி வளர வேண்டும்.

பழகும் விதம் நலமனால்,
உலகம் நலம்  வளமாகும்.
வளரும் விதம் நேரானால்
வாழும் விதம் சீராகும்.

கொ.பெ.பிச்சையா.














Sunday, 16 February 2014

காந்தி தாதா.

குழ்ந்தைப்  பாடல் (காந்தித்தாத்தா)

காந்தித் தாத்தா.

காந்தித் தாத்தா பாரம்மா.
கருணை மனிதர் தானம்மா.
சட்டை யணியா தாத்தாம்மா.
சட்டம் படித்த மேதையம்மா.

வெள்ளையரை வென்றவர்.
விடுதலையைப் பெற்றவர்.
அகிம்சை வழி சொன்னவர்.
அகிலம் போற்ற நின்றவர்

உழவன்  நிலை  அறிந்தவர்.
உரிமைக் குரல் கொடுத் தவர்
கிராம ராஜ்யம் அமைத்தவர்.
கோட்டு சூட்டும் மறந்தவர்.

ஏழைக்காகப்  பிறந்தவர்
ஏழை போல வாழ்ந்தவர்.
இராட்டைக்  கற்றுத் தந்தவர்
பாட்டாளியை  மதித்தவர்.

கோட்டை ஆள தவிர்த்தவர்.
கொத்தடிமை ஒழித்தவர்.
நாட்டுக்காக உழைத்தவர்
வாட்டும் சிறைகளில் வாழ்ந்தவர்

இந்தியாவைக் காத்தவர்
இறைவனாகி இருப்பபவர்.
காந்தி மகான் தானிவர்.
கைகூப்பி வணங்குவோம்.

கொ.பெ.பி.அய்யா,