Saturday, 1 February 2025

நல்வழி.

புதிய நல்வழி 5 (குழந்தைப் பாடல்)

நதிகள் எல்லாம் இணைப்போமே!
நாட்டு நலமும் செழிக்குமே!.
நிலங்கள் எல்லாம் நனைப்போமே!.
நீர் வளம் தங்கி நிலைக்குமே!
நுகரும் விலையும் சரியுமே!
நூதனம் பெருகி விரியுமே!
நெல்வயல் பரவிப் பெருகுமே!
நேரும் செல்வம் தேறுமே!
நொறுங்கி வறுமையும் சாகுமே!
நோக்கம் திருமை ஆகுமே!
நௌவும் கரை வந்து சேருமே!


நௌ---மரக்கலம்

கொ.பெ.பி.அய்யா.

நாய்க் குட்டி.

 நாய்க்குட்டி(குழந்தைப்பாடல்)

நாய்க்குட்டி நாய்க்குட்டி!
நானுங்கூடச் செல்லக்குட்டி.
அப்பாவுக்கு நல்லக்குட்டி.
அம்மாவுக்கு வெல்லக்கட்டி.

ஆடி ஓடிக் கூடலாம்
ஆருக்கும் உதவியும் செய்யலாம். 
பன்னும் பட்டரும் தின்னலாம்
இன்னும் நல்லா வளரலாம்

அம்மா சொல்லைத் தட்டாதே!
அடுப்படிப் பக்கம் போகாதே!
அங்கே இங்கே ஓடாதே!
எதையும் தட்டிக் கொட்டாதே!

வள வளப்புத் தரையிலே,
வழுக்கி விழவும் ஓடாதே!
நேரே நேரே நடக்கனும்
பாலை உறிஞ்சிக் குடிக்கனும்.

விடு விடுனு அலையாதே!
வீட்டுக்கு வெளியே ஓடாதே!
புடு புடுனு வண்டி வரும்.
பட்டு அடியும் வாங்காதே!

நல்ல பாப்பாப் பேரெடு!
நன்றி சொல்ல வாலாட்டு.
அப்பா பேச்சைக் கேட்கனும்.
தப்புச் செஞ்சா ஒத்துக்கனும்.

வீட்டைக் காப்பது உன் கடமை.
நாட்டைக் காப்பது என் கடமை.
வேண்டிக் கேட்டுச் சாப்பிடலாம்
வெறுக்கும் திருட்டை விலக்கிடலாம்.

கொ.பெ.பிச்சையா.

அகரவரிசை.

குழந்தைப்பாடல்(அகரவரிசை)

அப்பா இங்கே வா!! வா!
ஆடை வாங்கித் தா!தா!
இன்றே நாமும் போகலாம்.
ஈரக்காற்றில் மகிழலாம்..
உல்லாசமாய் இரயிலிலே
ஊட்டிமலைக் காணலாம்.
எழிலாம் மலர்க் கண் காட்சி
ஏரிப்படகும் இரசிக்கலாம்.
 !!ஐயென ஆடலாம்
ஒன்றின் பின்னே ஒன்றாக
ஓடுது மேகஙகள் அழகாக.
ஔடதங்கள்  எல்லாமே
௮ஃதேயாகும் நலமாக.

கவிஞர்.கொ.பெ.பிச்சையா
சை




முக்காலக் கவிஞன்.

முக்காலக் கவிஞன்.
(குழந்தைப் பாடல்)

பாரதி யார்?
பாரதி யாரம்மா 
பாப்பா நீ கூறம்மா
பாரதத்தாய் சாரதியாம்
பாரதியார் தானம்மா.

பாரதிதான் பாரம்மா?
பாப்பா உனக்குத் தெரியுமா?
பாப்பா பாட்டுப் பாடிய
பாரதியார் தானம்மா..

ஓடி ஆடச் சொன்னவர்.
ஓயக் கூடாதென்றவர்.
காலை படிக்கச் சொன்னவர்.
கடியக் கூடாதென்றவர்

தலைப்பாக் கட்டு கவிஞராம்.
தடித்த மீசைக்காரராம்
பிறமொழிகள் தமிழோடு
விரும்பிப் படிக்கச் சொன்னாராம்.

கருப்புப் பொட்டு இட்டவர்,
கருப்புக் கோட்டும் அணிந்தவர்,
காளியைத்தான் வேண்டுவார்
கவிகள் பாடித் தூண்டுவார்..

கூடிப் பழகப் பாடினார்.
பாடி மகிழக் கூறினார்.
தேடித் தேடி தமிழனை
தேச உணர்வை ஊட்டினார்

புதுமை‌ப் பெண் கண்டவர்
புதுக்கவிதை துணிந்தவர்.
வசனக் கவிதை படைத்தவர்
திசைகள் யாவும் அறிந்தவர்.

நதிகளெல்லாம் இணையவே
நாடு வளம் செழிக்கவே
சேது வழி அமைக்கவே
சிறக்க நலம் சொன்னவர்.

ஈழமதைத் தமிழோடு
இணையப் பாலம் கேட்டவர்.
வாழுந்தமிழ் உலகினை
வரையத்திட்டம் போட்டவர்.

உலகக் கவி கீட்சையும்
உயரம் தாண்டி நின்றவர்.
திலகமான தமிழ் நாடே
உலகின் மூலம் என்றவர்.

மொழிகள் பலவும் கற்றவர்,
மொழி பெயர்ப்புச் செய்தவர்.
மொழிகளெல்லாம் பழகியே
தமிழே இனிமை என்றாரே.

சிட்டுகளின் நண்பரவர்
பட்டுவிடக் கூடாதென்றார்.
கெட்டழியும் சூழலை
தொட்டு அன்றே காட்டினார்.

பத்திரிக்கைகள் நடத்தினார்.
எத்திசையும் பரவினார்.
வெள்ளையனின் கண்ணிலே
விரலை விட்டு ஆட்டினார்.

எட்டையபுரம் பிறந்தவர்
இந்தியாவில் வாழ்ந்தவர்.
சாட்டையாகி சமூகத்தின்
சடங்குமுறை ஒழித்தவர்..

சாதிமதக் கொடுமைகளை
நீதி கூறி ஓட்டினார்.
வேதங்களும் பேசுவதை
விளங்கவே எடுத்துரைத்தார்.

காதல் செய் என்றவர்
கட்டுடல் கொண்டவர்
எமனையும் காலாலே
எட்டியே உதைத்தவர்.

முக்காலக் கவிஞரவர்
எக்காலமும் வாழுவார்.
இக்காலக் கவிஞருக்கும்
சொற்கோலம் சொன்னவர்.

கொ.பெ.பிச்சையா.

எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர்.(குழந்தைப் பாடல்)

சொல்லிப் புரியனுமா- பாப்பா
துள்ளித் திரியனுமா- உனது
வெள்ளை மனம் போல-
எம்ஜியார்
வள்ளல் குணம் கேளு.

நீங்கள் நல்ல பிள்ளைகளாக,
உங்களை நம்பும் செல்லங்களாக
திங்கள் முகமவர் எம்ஜியார் பாடிய பாட்டு,
பொங்கும் ஊக்கம் தங்கட்டும் நல்ல குழந்தைகள் கேட்டு.

எங்கள் தங்கம் என்று தமிழகம் என்றும் கொண்டாடும்,
இதயக்கனி புரட்சி நடிகர் புரட்சித் தலைவராம்.
இறுதிவரை மூன்றுமுறை ஆண்ட முதல்வராம். 
தமிழகம் ஆண்ட முதல்வராம்.

வாரிக் கொடுத்த வள்ளலாக வாழ்ந்த பொன்மனம்,
நேர்மையாக நிசமாக ஆண்ட செம்மலாம்.
நாடும் செல்வம் ஏற்று ஏழ்மை வாழ்ந்த எம்ஜியார்,
வீடு வாசல் சொத்து எல்லாம் கொடுத்த எம்ஜியார்,

திரைப் படங்கள் எல்லாமே கதைப் படங்கள் ஆனாலும், அவர் படங்கள் சொல்லுவது அறத்தின் பாடஙகள்.
வாழும் போது வாழ்ந்த வரை மக்கள் திலகமே!
பூமி வாழும் காலம் மட்டும் எம்ஜியார் புகழே சாமியாம்.

கொ.பெ.பிச்சையா.





நிலாப் பாட்டு.

குழந்தைப் பாடல் 
 (நிலாப்  பாட்டு.)

நிலா வருது பாரடி!
நீயே அதனைக் கேளடி!.
உலாப் போவது எங்கேடி!
கூட்டிப் போக வருதடி.!

நிலா சாப்பிடச் சொல்லுது.
உலாக் கூப்பிட்டுச் செல்லுது.
தேடித் தேடி அலைகிறது.
ஓடி ஓடி ஒளிகிறது.

சாப்பிடு சாப்பிடு சாப்பிட்டு
கூப்பிடு நிலா ஓடிவரும்.
கூப்பிடு கூப்பிடு கூப்பிட்டு
கூடி நிலாவைத் தேடுவோம்.

கொடுத்துச் சோறு சாப்பிடு
கண்ணாம் மூச்சி விளையாடு.
சாப்பிட்டால் தான் ஓடலாம்.
கூடி விளை யாடலாம்.

ஓடி அலைஞ்சி தேடுது.
தேடி ஒளிஞ்சி‌ பார்க்குது.
சாப்பிடு சாப்பிடு சீக்கிரம்
கூப்பிட நிலா வந்துரும்.

 நிலா வானில் நீந்துது.
உலகைச் சுற்றிப் பார்க்குது.
உண்டால் நீயும் வளரலாம்.
உலகைச் சுற்றிப் பார்க்கலாம்.

அதோப் பாரு அங்கே!
இதோப் பாரு இங்கே!
அங்கே இங்கே எங்கே!
மங்குது ஒளிருது கண்டே!

பாலுஞ் சோறும் உண்டே!
பாப்பபா உன்னைத் தேடுதே.
உண்ணு உண்ணு சீக்கிர்ம்
கண்ணுறங்கிக் கூடலாம்.

கொ.பெ.பிச்சையா.

..




வஉசி


வ.உ.சி.///////குழந்தைப் பாடல்.

வ. உ. சி யார் தெரியுமா
வைரம் மனிதரவர் புரியுமா
வழக்கறிஞர் வ. உ. சியார்
வறுமைக்குச் சோறு போட்டவர்.

இப்புவியில் வெள்ளையரை
எதிர்த்துக் கப்பல் விட்டவர் 
கப்பல் ஓட்டிய தமிழன் யார்?
கண் மணியே நீ கூறு.

வழக்கறிஞர் வ.உ.சி என்பார்.
வரலா றறிந்த மாவீரர்.
பிள்ளை என்று சொன்னாலே
உள்ளம் பதறுவர் வெள்ளையர்

கட்டபொம்மன் விட்ட இடம்
தொட்ட தியாகச் செம்மலவர்.
ஓட்டப்பிடாரம் உலக நாதர்
பெற்ற பிள்ளை வள்ளலவர்.

செக்கிழுத்த செம்மல் இவர்
சொத்திழந்த சுதந்திர வீரர்.
உரிமை மீட்கப் போராடி
சிறைப் பட்டுக் கல்லுடைத்தார்.

வாழும் நாட்டின் உரிமைக்காக
நாளும் தானே வழக்காடினார்.
பட்டம் பதவி எல்லாத்தையும்
பறிகொடுத்து வறுமைப் பட்டார்.

இந்தியாவில் ஒருவரவர்
ஐயா வ.உ.சி என்பதவர்
சிங்கம் அவர் தென் தமிழர்
சிதம்பரனார் என்பது பேர்.

மிச்சந்தன் உயிர் அதையும்
துச்சம் என்றே துறந்தாரு.
முத்தமிட்டுப் பாரதத்தை
முன் மொழிந்தாரு.
கட்டாயம் விடியும் என்றே
கண் அயர்ந்தாரு.

கொ.பெ.பி.அய்யா.



ஏழைக்காக எம்ஜிஆர்

வள்ளல் எம்ஜியார்
(குழந்தைப் பாடல்)

எம்ஜியாரு எம்ஜியாரு
என்பதே அவர் பேரு
என்றும் அவர் நம்மோடு
வாழ்கிறாரு சூப்பர் ஸ்டாரு.

அன்பு கொண்ட நெஞ்சங்கள்
அவருக்குள்ள சொந்தங்கள். 
குழந்தையுள்ளம் கொண்டவர்.
கொஞ்சும் தமிழ் எம்ஜியாரு.

பேசும் தமிழ் இதயங்கள்
வாழுங் கனி எம்ஜியார்.
மக்கள் போற்றும் தலைவராம்.
மக்கள் திலகம் எம்ஜியார்.

செல்லச் சின்னப் பிள்ளைகள்
நல்ல நாளைத் தலைவர்கள்.
பண்பில் மேலே உயரவே
படிக்கச் சொன்னார் எம்ஜியார்.

சத்தாய் உணவு உண்ணவும்  
கருத்தாய் பாடம் படிக்கவும்
புத்தகம் பை பேனாவுடன்
மொத்தமும் கொடுத்தார் எம்ஜியார்.

தமிழகத்தின் முதல்வராய்
தலை சிறந்து ஆண்டவர்.
நல்ல குணம் கொண்டவர்,
வள்ளல் மனம் எம்ஜியார்,

உழைத்துச் சேர்த்தப் பொருளை எல்லாம்,
களைத்து வியர்த்த ஏழைக் களித்தார்.
பிறருக்காக வாழ்ந்த எம்ஜியார்
உறவுக்காக என்ன வைத்தார்?

கொ.பெ.பிச்சையா.

கண்சிமிட்டும் நட்சத்திரம்.

மின்னும் நட்சத்திரம்.

சின்னச் சின்ன நட்சத்திரம்
விண்ணில் மின்னும் நட்சத்திரம்.
என்னே நீ அதிசயம்.!
பார்க்க ரொம்பச் சின்னது--ஆனால் 
பலமடங்குப் பெரியது.

உனக்கும் மேலே எத்தனை தூரம்?
கண்கள் சிமிட்டும் அழகைப் பாரு
கண்ணைப் பறிக்கும் வைரம் போலவே!
மின்மினுப் பூச்சிகள் சொலிப்பதைக் கேளு.
 
கொ.பெ.பிச்சையா.

நலம் பழகு.

புதிய  நல்வழி!-3

சரித்திரம் பழகு!
சாத்திரம் விலகு!
சிறப்புக்கு உயர்க!
சீர்மை தொடர்க!
சுருஙகப் பேசு!
சூதினை ஓழி!
செம்மை மேவு!
சேவை மகிழ்க!
சைவம் போற்று!
சொர்ககம் படை!
சோம்பலை மற!
சௌந்தர்யம் மயங்காதே!

கொ.பெ.பி.அய்யா.