Wednesday, 22 January 2025

சின்னஞ் சிறு கிளி.

சின்னஞ்சிறுக் கிளியே!(குழந்தைப் பாடல்)

சின்னஞ்சிறு கிளியே !
செல்வக் களஞ்சியமே!
எண்ணப் பெருங்கொடையே!-என்றும்
இனிக்கும் தேனமுதே!(சின்ன)

உன்னைத் தீண்டையிலே
உள்ளம் குளிர்கிறதே!
என்னை நினைக்கையிலே!-கர்வம்
ஏறி வளர்கிறதே!(சின்ன)

அன்னை மடியினிலே!
ஆசை நிறைத்தவளே!
உன்னை அவள் வடிவில்
எண்ணக்  கிடைத்தவளே!(சின்ன)

தன்னை உணவாக்கி இன் ரன்
அன்னை வளர்த்தாளே
உன்னில் என்னுயிரை-அவள்
ஊட்டி வடித்தாளே!(சின்ன)

முன்னைப் பெரியவர்கள்
உன்னில் தெரிகின்றரே.
இந்நாள் என் தோளில்நீயோ
பிந்நாளை எழுதுகிறாய்.(சின்ன)

பெண் நீ பிறப்பதற்கு 
முன்தவம் இருந்ததற்கு
உன்னைப் பெற்றதற்கு-இறைவன்
உதவினான் வாழ்வதற்கு.(சின்ன)

பெண்ணின் பெருமைகளும்
உன்னில் அருமை சொலும்.
அன்னைத் தந்தையரும்உன்னால் 
அடைவோம் அருமைகளும்.(சின்ன)

உன்னைப் பெற்றதற்கும்
உலகம் எம்மைப் போற்றும்
பெண்ணை ஏற்றுதற்கும்நீயும்
உன்னை ஈந்திடணும்(சின்ன)

பழைமை மடைமைகளை
அவரின் மற்றத்து ஒழித்திடணும்.
பெண்மைத் தன்மை காத்தும்-தமிழின்
பண்பைக் காத்திடணும்.(சின்ன)

கற்றும் உயர்ந்திடணும்.
சுற்றம் அறிந்திடும்.
நுட்பந் தெளிந்திடணும்—கருத்தில்
திட்பம் நின்றிடணும்.
(சின்ன)

கொ.பெ.பிச்சையா.
  







No comments:

Post a Comment