அழகு மயில்.(குழந்தைப்பாடல்)
அதோ அங்கே அழகு மயில்,
அசைஞ்சு அசைஞ்சு நடக்ககிறது,
நீளமான வாலை நீட்டி
நிமிர்ந்து கர்வம் காட்டுகிறது
வண்ண வண்ணச் சிறகினை,
விரித்து விரித்துக் காட்டுகிறது
வானில் ஓடும் மேகங்கண்டு
வரிசை கட்டி ஆடுகிறது..
ஆடும் அழகுங் கூடுகிறது
அழகுக் கொண்டை ஆடுகிறது
கால் நடனம் நாட்டியம்,ஆட
சலங்கைக் கட்டி விடலாமா?
இன்னும் கொஞ்சம் ஆடிடவே
எண்ணும் சந்தோச மாகிறது.
உண்ணத் தனக்குப் பழங்களும்
ஊட்டி விடக் கேட்கிறது.
கருமேகங் கண்டு ஆடுகிறது.
வரும் மழை வாழ்த்தி ஆடுகிறது.
வெப்பம் போனதைக் கூறுகிறது.
வெளியே அகவி அழைக்கிறது.
அரை வட்டமாகச் சிறகினை
அகழ்த்திக் கணிதம் சொல்கிறது
கோண மானியைக் காட்டுகிறது
வான வளைவைத் தோற்றுகிறது.
அழகினை இரசித்து மகிழ்கிறது.
உலகின் வடிவை உணர்த்து கிறது.
பழகிடப் பாப்பாவைக் கூப்பிடுகிறது
அழகைக் காட்டி ஆடுகிறது.
கவஞர் கொ.பெ. பிச்சையா.
.
.
No comments:
Post a Comment