Monday, 17 February 2014

குழந்தை பேசுகிறது.

குழந்தை பேசுகிறது!

சின்னச் சின்னக் குழந்தை நான்.
சிரிக்கும்  அன்புக் குழந்தை நான்.
மனசு எனும் சுமையில்லை.
எனது எனும் குணமில்லை.

மெல்ல மெல்லப் 
பேசுகிறேன்
அள்ளி அள்ளிக் கொஞ்சுவீர்
அதட்டி மட்டும் அடக்காதீர்.
பயங்காட்டி மிரட்டாதீர்.

பயம் பழகும் செயலினை,
பாப்பாவிடம் பழக்கா தீர்.
சுயம் பயிலுங் குழந்தையை
தயவு பண்ணித் தடுக்காதீரீ!

கண்ணீர் கசியச் செய்யாதீர்!
எண்ணம் பதிய திட்டாதீர்!
அஞ்சாமை ஊட்டு வீர்!
பிஞ்சிலே நாட்டு நீர்!

வெற்றுக் காகிதம் போல நான்.
சிறு  நெஞ்சம் வெள்ளை நான்.
பதிவுகளைச் சுமக்கும் நான்.
விதி எழுதப் படிக்கிறேன் நான்.

அன்புதானே குழந்தைக்கு
அருமருந்து ஆகிக்காக்கும்!
அரவணையும் குழந்தைக்கு
ஆரோக்யம் பாசம் ஆக்கும்.

திடுக்கிடும் பேச்சுக்களை
விடுக்காதீர் குழந்தை முன்
முடுக்கப்பட்டும் இதயமோ!
துடிக்கும் வேகம் சீர் கெடும்

சிரிக்க விட்டு மகிழுவீர்!
சிறு ஆட்டம் காட்டுவீர்!
உற்சாகம் ஏற்றி ஏற்றி
உடல் வலிமைக் கூட்டுவீர்!

கட்டங்கட்டி இருத்தாதீர்!
வட்டத்துக்குள் ஒடுக்காதீர்!
இட்டத்துக்கும் விளையாட
விட்டு விட்டும் விலகாதீர்!

இல்லம் ஒரு பள்ளி போலும்,
பள்ளி பயிற் களம் போலும்,
நல்லதொரு சூழ் நிலையும்:
உள்ளதாகி வளர வேண்டும்.

பழகும் விதம் நலமனால்,
உலகம் நலம்  வளமாகும்.
வளரும் விதம் நேரானால்
வாழும் விதம் சீராகும்.

கொ.பெ.பிச்சையா.














No comments:

Post a Comment