குழந்தைப்பாடல்(அகரவரிசை)
அப்பா இங்கே வா!! வா!
ஆடை வாங்கித் தா!தா!
இன்றே நாமும் போகலாம்.
ஈரக்காற்றில் மகிழலாம்..
உல்லாசமாய் இரயிலிலே
ஊட்டிமலைக் காணலாம்.
எழிலாம் மலர்க் கண் காட்சி
ஏரிப்படகும் இரசிக்கலாம்.
ஐ !ஐ!ஐயென ஆடலாம்
ஒன்றின் பின்னே ஒன்றாக
ஓடுது மேகஙகள் அழகாக.
ஔடதங்கள் எல்லாமே
௮ஃதேயாகும் நலமாக.
கவிஞர்.கொ.பெ.பிச்சையா
சை
No comments:
Post a Comment