Saturday, 1 February 2025

வஉசி


வ.உ.சி.///////குழந்தைப் பாடல்.

வ. உ. சி யார் தெரியுமா
வைரம் மனிதரவர் புரியுமா
வழக்கறிஞர் வ. உ. சியார்
வறுமைக்குச் சோறு போட்டவர்.

இப்புவியில் வெள்ளையரை
எதிர்த்துக் கப்பல் விட்டவர் 
கப்பல் ஓட்டிய தமிழன் யார்?
கண் மணியே நீ கூறு.

வழக்கறிஞர் வ.உ.சி என்பார்.
வரலா றறிந்த மாவீரர்.
பிள்ளை என்று சொன்னாலே
உள்ளம் பதறுவர் வெள்ளையர்

கட்டபொம்மன் விட்ட இடம்
தொட்ட தியாகச் செம்மலவர்.
ஓட்டப்பிடாரம் உலக நாதர்
பெற்ற பிள்ளை வள்ளலவர்.

செக்கிழுத்த செம்மல் இவர்
சொத்திழந்த சுதந்திர வீரர்.
உரிமை மீட்கப் போராடி
சிறைப் பட்டுக் கல்லுடைத்தார்.

வாழும் நாட்டின் உரிமைக்காக
நாளும் தானே வழக்காடினார்.
பட்டம் பதவி எல்லாத்தையும்
பறிகொடுத்து வறுமைப் பட்டார்.

இந்தியாவில் ஒருவரவர்
ஐயா வ.உ.சி என்பதவர்
சிங்கம் அவர் தென் தமிழர்
சிதம்பரனார் என்பது பேர்.

மிச்சந்தன் உயிர் அதையும்
துச்சம் என்றே துறந்தாரு.
முத்தமிட்டுப் பாரதத்தை
முன் மொழிந்தாரு.
கட்டாயம் விடியும் என்றே
கண் அயர்ந்தாரு.

கொ.பெ.பி.அய்யா.



No comments:

Post a Comment