குழந்தைப் பாடல்
(நிலாப் பாட்டு.)
நிலா வருது பாரடி!
நீயே அதனைக் கேளடி!.
உலாப் போவது எங்கேடி!
கூட்டிப் போக வருதடி.!
நிலா சாப்பிடச் சொல்லுது.
உலாக் கூப்பிட்டுச் செல்லுது.
தேடித் தேடி அலைகிறது.
ஓடி ஓடி ஒளிகிறது.
சாப்பிடு சாப்பிடு சாப்பிட்டு
கூப்பிடு நிலா ஓடிவரும்.
கூப்பிடு கூப்பிடு கூப்பிட்டு
கூடி நிலாவைத் தேடுவோம்.
கொடுத்துச் சோறு சாப்பிடு
கண்ணாம் மூச்சி விளையாடு.
சாப்பிட்டால் தான் ஓடலாம்.
கூடி விளை யாடலாம்.
ஓடி அலைஞ்சி தேடுது.
தேடி ஒளிஞ்சி பார்க்குது.
சாப்பிடு சாப்பிடு சீக்கிரம்
கூப்பிட நிலா வந்துரும்.
நிலா வானில் நீந்துது.
உலகைச் சுற்றிப் பார்க்குது.
உண்டால் நீயும் வளரலாம்.
உலகைச் சுற்றிப் பார்க்கலாம்.
அதோப் பாரு அங்கே!
இதோப் பாரு இங்கே!
அங்கே இங்கே எங்கே!
மங்குது ஒளிருது கண்டே!
பாலுஞ் சோறும் உண்டே!
பாப்பபா உன்னைத் தேடுதே.
உண்ணு உண்ணு சீக்கிர்ம்
கண்ணுறங்கிக் கூடலாம்.
கொ.பெ.பிச்சையா.
..
No comments:
Post a Comment